தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 21, 2017

உங்கள் தோழி இப்படி எல்லாம் செய்றாங்களா?? அப்ப நீங்க....

பெண்களுக்கு என்னதான் காதல் பீரிட்டு அடித்தாலும், அவர்களாக கூறுவதை தவிர்த்து, அந்த ஆண் தானாக தங்களிடம் வந்து, காதலை தெரிவிக்க செய்ய தான் அதிகம் முயற்சிப்பார்கள்.
இப்படி தாங்கள் விரும்பும் ஒரு ஆண்மகனை தங்களிடம் ப்ரபோஸ் செய்ய வைக்க பெண்கள் என்னென்ன செயல்களில் எல்லாம் ஈடுபடுவார்கள்., என்னென்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்வார்கள் என இங்கே காணலாம்
1) ஷாப்பிங் செல்லும் போதெல்லாம் உங்களை உடன் அழைத்து செல்வார்கள்
2 ) விடுமுறை நாட்களில் உங்களுடன் நேரம் செலவழிக்க முயல்வார்கள். அவர்களது ட்ரிப்பில், உங்களையும் சேர்த்துக் கொள்வார்கள்.
3) திருமணமான நண்பர்களுடன் வெளியே செல்லும் போது, உங்களை அவர்களுடன் இணைத்துக் கொள்வார்கள்.
4) உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா, எப்போ நீ கல்யாணம் பண்ணிப்ப, வீட்ல பொண்ணு பாக்குறாங்களா? என உங்கள் திருமணத்தை பற்றியே பேசுவார்கள்.
5) உங்களை மிஸ் செய்வது போன்ற உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். உங்களையும், அவர்களை மிஸ் செய்வது போல உணர வைப்பார்கள்
6) உங்களால் தவிர்க்க முடியாத நபராக மாறி, உங்கள் வாழ்க்கையை, நாட்களை ஆக்கிரமிப்பு செய்துக் கொள்வார்கள்.
7) உங்களை பற்றியும், நீங்கள் செய்யும் காரியங்கள் பற்றியும், நேரடியாக கருத்து கூறி விமர்சிப்பார்கள். உங்கள் மீது அதிக அக்கறையும் எடுத்துக் கொள்வார்கள்
8) தங்கள் தோழிகளுக்கு அறிமுகம் செய்வார்கள். அவர்களுடன் வெளியே செல்லும் போதும் உங்களை சேர்த்துக் கொள்வார்கள்.
9) நீங்கள் எப்போதும் புரிந்துக் கொள்ளாமல் இருந்தால், உங்களை விட்டு ஒட்டு மொத்தமாக பிரிந்து செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் அவர்கள் இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்குவார்கள்.
10) எதற்கும் நீங்கள் மசியவில்லையா? அல்லது நீங்கள் எதுவும் புரியாத மக்காக இருந்தால், வேறு வழி இல்லாமல், அவர்களே ப்ரபோஸ் செய்துவிடுவார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170421126557?ref=builderslide#sthash.nb1CoUHS.dpuf

No comments:

Post a Comment