தன் விடாமுயற்சியும், பேரக் குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்காகவும், தன்னால் முடிந்த முயற்சிகளை இந்தப்பாட்டி மேற்கொண்டுவருகின்றார்.
கண்டி வீதியில் (A9), மூன்று முறிப்பு பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தடியில் பூக்களை விற்று தனது குடும்பத்தினை காப்பாற்றி வருகின்றார் இந்தப்பாட்டி.
தினமும் காலை 8 மணி தொடக்கம் மாலை வரை பூ வியாபாரம் செய்து பெற்றோரை இழந்த தனது பேரப்பிள்ளைகளை வளர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இவரின் குடும்பத்திற்கு உதவி புரியும் மனம் இருந்தால், தினமும் ஆலயத்தில் தரித்து நின்று வணங்கி செல்லும் ஆயிரக்கணக்கானோர் பூக்களை வாங்கி உதவி செய்யலாம்.
இது அவருக்கு மட்டும் அல்ல அவரின் பெற்றோரை இழந்த பேரக்குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும் .
A9 வீதியில் மூன்று முறிப்பு பிள்ளையார் கோயில் அருகில் இப்படி ஒரு தாய்!!! தெரிகிறதா?
கண்டி வீதியில் (A9), மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தடியில் “இரத்தினம்” என்ற பெயருடன் ஒரு வயதில் மூத்த பெண்மணி
தினமும் காலை 8 மணி முதல் 3அல்லது4 shopping bag நிறைய பூக்களுடன் அமைதியாய் உட்காந்திருப்பார்.
ஒரு பை 50/= . அப் பைகளை விற்பதற்காக ஏறத்தாழ 11 மணிவரை அவ்விடத்திலேயே காலை உணவின்றி அமர்ந்திருப்பார்.
பெற்றோரை இழந்த தனது பேரப்பிள்ளைகளை வளர்ப்பதற்குத் தன்னால் இயன்றதை பிச்சை எடுக்காது செய்து வருகிறார்.
தினமும் அவ்வாலயத்தில் தரித்து நின்று வணங்கி செல்லும் ஆயிரக்கணக்கானோர் இவரது 50/= உழைப்பிற்கு மரியாதை கொடுத்து அப்பைகளில் ஒன்றை வாங்கி உங்கள் வாகனத்தில் வைக்கலாம் அல்லது பூக்களை கருவறையருகில் வைத்துவிட்டு சென்றால் மத்தியான பூசைக்கு குருக்கள் அதை பாவிப்பார்.
இந்த 50/= அவரது வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
அருகிலேயே உள்ள கடையில் பூக்கள் மாலைகள் உண்டு. ஆனால் 4 பை பூக்களுக்கு உதவுவதால் இவர் போட்டியாக வியாபாரத்தை பெருக்கப் போவதில்லை.
கடை போடப்போவதுமில்லை , அதற்கு அவரது வயதும் உடல்நிலையும் ஒத்துழைக்காது.
நீங்கள் அதில் ஒரு பையை வாங்கி உதவுவதால் அன்றைய காலை உணவை அவர் சற்று முன்னதாக உண்ண முடியும். அவ்வளவுதான்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக