தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஏப்ரல், 2017

மகாபாரதம் மிகப்பெரிய உண்மை : 12000 வருடங்களுக்கு முன்பே அணுவால் தாக்கப்பட்ட பூமி

சுமார் 12000 வருடங்களுக்கு முன்பே பூமி மீது அதி சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்துக்களின் இதிகாசமான மகாபாரத போரின் போது உண்மையில் அணு ஆயுதங்களே பிரயோகிக்கப்பட்டன எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மகாபாரதத்தில் அர்ச்சுனன் சூரியனிடம் இருந்து சக்தியை பெற்று அந்த ஆயுதம் மூலமாக கௌரவர்களை தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆயுதம் அதி சக்தி மிக்க அணு ஆயுதங்களாகவே இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மகாபாரத யுத்தம் இடம் பெற்றதாக கூறப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமும், அங்கு கிடைக்கப்பெற்ற எலும்புக் கூடுகள் போன்றன மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமும் இதனை வலுப்படுத்துகின்றனர்.
இன்றும் ராஜஸ்தான் மாநிலப்பகுதிகளில் மனிதர் வசிக்க முடியாத அளவு அணுக் கதிர் வீச்சுகள் அதிகமாக கொண்ட இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் ஆதாரங்களாக ஆய்வாளர்கள் கூறினாலும் அப்போதைய காலப்பகுதியில் அணு என்பது எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு மட்டும் பதில் கூற வில்லை.
அதேபோன்று சுமார் 12000 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட குகைச் சிற்பங்களில் இப்போது காணப்படும் அணு ஆயுதத்தை அச்சு அசலாக வடித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது பூமி மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது எவ்வகையில் சாத்தியம் என்பது தொடர்பில் கூறப்படவில்லை. இந்த ஓவியங்கள் பூமியில் ஏற்படப்போகும் மாற்றங்களை தீர்க்கதரிசனங்களாக கூறப்பட்டவையாக இருக்கலாம் என்ற வகையில் சிந்திக்கும் போது.,
மகாபாரதத்தில் அணு ஆயுதப்பாவனை விடயம் இதனை கேள்விக்குறியாக்கி விட்டது. என்றாலும் இது தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் தீவிர ஆய்வுகள் மூலம் கூடிய விரைவில் பதில்கள் கிடைக்கும் என்றே கூறப்படுகின்றது.
மகாபாரதம் இதிகாசம், மதம் என்ற வரையரைக்கு கட்டுப்படுத்தப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு போனது. உண்மையில் அந்த யுத்தம் இப்போது உலகில் இருக்கும் நவீன ஆயுதங்களை விடவும்.,
அதி சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மூலமாக நடைபெற்றுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் அந்த யுத்தம் யாரால்? ஏன் செய்யப்பட்டது? விடைகள் கிடைக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக