தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தமிழகத்தை சேர்ந்த இந்த சிறுவனின் மாதச் சம்பளம் ரூ.2.5 லட்சம்!

தமிழகம், கடலுார் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் அனில்குமார். தனியார் பாடசாலை ஆசிரியர். இவரது மனைவி பெட்டா, பொலிஸ் எஸ்.ஐ.,யாக இருக்கிறார்.
இவர்களது 14 வயது மகன் ரிஷிகுமார் தனியார் பாடசாலையொன்றில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
படிப்பில் சுட்டியான இவர், ‘மொபைல் ஆப்’ உருவாக்குவதிலும் வல்லவர். மாணவர் ரிஷிகுமார், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில், ‘மோஷன் டிரேடர்’ எனும், ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதன் மூலம், சி.சி.டி.வி., கெமராவில் பதிவாகும் முகங்களை, அவரவர் மொபைல் போனில் பதிவு செய்யவும் மொபைல் போன்களில் கெமராவை ஆன் செய்யாமல், சென்சார் மூலம் முகங்களை பதிவு செய்யும் வசதி உள்ளது.
72க்கும் மேற்பட்ட கேம்ஸ் ஆப் உருவாக்கி, 30 ஆப்களை, கம்பெனிகளிடம் விற்பனை செய்துள்ளார்.
’ரோபோனாட்டிக்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கி, நடத்தி வரும் மாணவர் ரிஷிகுமார் கூறியதாவது:
‘இன்டர்நெட் மூலம் ஆப்களை உருவாக்கவும், ரோபோக்களை செயல்படுத்தும் புரோகிராம்களை உருவாக்கவும் கற்றேன். ‘மோஷன் ட்ரேடர்’ ஆப் முதலில் உருவாக்கி, அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவு செய்து, செயல்படுத்தினேன்.
நான் உருவாக்கி உள்ள ஜார்விஸ் மினி சி.பி.யு.,வை, குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் மாதம், 2.50 லட்சம் ரூபாய் (இந்திய ரூபா) சம்பாதிக்கிறேன்.
இதில், 50 சதவீத தொகையை என் கண்டுபிடிப்புகளுக்கும், 30 சதவீதத்தை ஆதரவற்றோர், ஏழை மாணவர்கள் கல்வி செலவுக்கும் உதவி வருகிறேன்.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, கென்விதானே படேல் கம்பெனியில், சி.இ.ஓ.,வாக பணியாற்ற, எனக்கு அழைப்பு வந்துள்ளது.
மேலும், பல கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் தேடி வருகின்றன, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக