தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 26, 2017

நினைத்தது பலிக்கும் மசூதி!!

அமீன் தர்கா, கடப்பா நகரில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடமான இது ஒரு சமூக நல்லிணக்க கூடாரமாகவும் உள்ளது. எப்படி தெரியுமா?
இந்த மசூதிக்கு நோய் தீர்க்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.. முன்னாள் பிரதமர்கள் பலரும் இந்த மசூதிக்கு வந்துள்ளனர். இந்த இடத்துக்கு வந்த பின்னர்தான் பிரபல நடிகை ஒருவருக்கு நோய் முற்றிலும் தீர்ந்து மீண்டும் பாலிவுட்டில் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த மசூதி அனைத்து மத மக்களும் வரவேற்கிறது. இங்குள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் சமூக நல்லிணக்கத்தின் சின்னமாக அமைந்துள்ளது. இதன் பாதைகள் சாதி மதம் பாராது அனைத்து மக்களுக்கும் நாளெல்லாம் திறந்திருக்கும். இங்கு நிகழும் விநோதங்களையும், நோய் தீர்க்கும் நிகழ்வுகளையும் தற்போது காண்போம்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ளது அமீன் தர்கா. இது மிகவும் பெரியது ஆகும்.
ஆண்டு தோறும் சந்தனத் திருவிழாக்கள் இந்த தர்காவினுள் நடத்தப்படுகின்றன. இங்கு பிரார்த்திக்கப்படும் அனைத்து வேண்டுதல்களும் நடந்தே தீரும் என்பது இந்த இடத்தின் சிறப்பாகும்.
இந்த தர்கா மிக பழமையான வரலாறு கொண்டது. இந்தியாவில் பொதுவாக கோயில்கள்தான் பழமையானதாக இருக்கும். அதற்கிடையில் இந்த தர்காவும் மிக பழமையானது.
இவை கட்டப்பட்ட காலம் 1683 என நம்பப்படுகிறது. முகலாய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இன்னொரு தகவலும் கிடைக்கிறது.
இந்த தர்கா இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் வந்து சென்ற இடமாகும். இந்த தர்காவுக்கு வருகை தந்தவர்களுள் மிக முக்கியமானவர் நம் பாரத நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். அவரைத் தவிர இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
1716ம் வருடம் கடப்பா நகரின் இந்த குறிப்பிட்ட இடத்தில் சந்யாசிகள் பலர் ஜீவ சமாதி அடைந்தனர். அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட தர்கா தான் இந்த அமீன் பீர் தர்கா.
வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பீருல்லாஹ் ஹுசைனி, இரண்டாம் அருஃபுல்லாஹ் ஹுசைனி ஆகிய இரண்டு சூஃபி ஞானிகளின் ஆசியை பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த இரண்டு சூஃபி ஞானிகளின் சமாதி இங்கு இருப்பதோடு, அவர்களிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது பலிக்கும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது.
இவ்விரண்டு சூஃபி ஞானிகளில் பீருல்லாஹ் ஹுசைனி முஹமது நபியின் வழித்தோன்றலாக பார்க்கப்படுகிறார்.
அதோடு இந்த இரண்டு சூஃபி ஞானிகளின் சந்ததியினர் இன்னும் இங்கு சேவை செய்து வருவதோடு, மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்ட காவி உடையில் காட்சியளிக்கின்றனர்.
கடப்பா நகருக்கு விஜயவாடா, திருப்பதி, குண்டூர் உள்ளிட்ட ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் கடப்பா நகருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடப்பா ரயில் நிலையம் மும்பை-சென்னை வழித்தடத்தில் அமைந்திருப்பதால் இந்த ரயில் நிலையத்தில் முக்கியமான ரயில்கள் அனைத்தும் வந்து செல்கின்றன.
கடப்பா நகரின் மத்தியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இதுதவிர கடப்பா நகருக்கு அருகில் இருக்கக்கூடிய பன்னாட்டு விமான நிலையமாக ஹைதராபாத் விமான நிலையம் அறியப்படுகிறது.
- See more at: http://www.manithan.com/news/20170426126674?ref=builderslide#sthash.vgNQ9IU9.dpuf

No comments:

Post a Comment