தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 23, 2017

நீங்க இந்த நேரத்தில் பிறந்தவர்களா?

ஒருவர் பிறந்த நேரத்தை பொறுத்தே அவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அவரின் ராசி, நட்சத்திரத்தினை பொறுத்தே அவரின் எதிர்காலம், வேலை குறித்து அறியப்படுகிறது.
அதன் அடிப்படையில் குணாதிசயங்கள் மாறுகிறது. அவர்களின் வாழ்க்கையினை கணிக்கலாம்.
அதிகாலை 6 முதல் 8
இந்நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவத்துடனும், சிலர் நேரத்தை வீணடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது இவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும்.
காலை 8 முதல் 10
இந்நேரத்தில் பிறப்பவர்கள் நல்ல நட்பும், சுற்றமும் கொண்டிருப்பார்கள். பொருளாதாரம் சீரான நிலையில் இருக்கும். இவர்களது வாழ்வில் பணம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இவர்கள் சற்று விரக்தியுடன் காணப்படலாம்.
நண்பகல் 10 முதல் 12
இந்நேரத்தில் பிறந்தவர்கள் பின்தொடரும் காரியங்கள் எல்லாம் வெற்றியே தரும். இவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். பெருமை கொள்ளும் வகையில் வாழ்வார்கள்.
மதியம் 12 முதல் 2
இந்நேரத்தில் பிறப்பவர்கள் அதிக பயணம் சார்ந்த எதிர்காலம் கொண்டிருப்பார்கள். இவர்களது வேலை அல்லது பர்சனல் விஷயங்கள் பயணம் சார்ந்து அமையலாம். புத்திகூர்மை கொண்டுள்ளவர்களாக திகழ்வார்கள். நல்ல குணத்திற்கு பெயர்பெற்று திகழ்வார்கள்.
மதியம் 2 முதல் 4
பணம் சார்ந்து துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் லீகலாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.
மாலை 4 முதல் 6
இந்நேரத்தில் பிறந்தவர்கள் பொறுப்பு, கடமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை வலிமையாக இருக்கும். மக்களுடன் அதிகம் தொடர்பு கொள்ளும் வகையிலான வேலை செய்வார்கள்.
மாலை 6 முதல் 8
இந்நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர்களை சார்ந்து வாழும் விதமாக அமைந்து காணப்படுவார்கள்.குடும்பம் என்பது இவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். சமூக வாழ்க்கையில் அதிகம் இணைந்திருப்பார்கள்.
இரவு 8 முதல் 10
இந்நேரத்தில் பிறந்தவர்கள் மத்தியில் கற்பனை திறன் அதிகம் காணப்படும். திறமைகள் அதிகம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள், அதிலும் சிறந்து காணப்படுவார்கள்.
இரவு 10 முதல் 12
இந்நேரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக காணும் பண்பு கொண்டிருப்பார்கள். ஏற்றத்தாழ்வுகளை எளிதாக கடந்து வந்துவிடுவார்கள்.
நள்ளிரவு 12 முதல் 2
இந்நேரத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். சாகசங்களை விரும்புவார்கள். பயணிக்க விரும்புவார்கள். ஊடகம் சார்ந்த வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள்
நள்ளிரவு 2 முதல் 4
இந்நேரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு சார்ந்த விருப்பம் அதிகம் இருக்கும். குடும்பம் மற்றும் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும்.
http://news.lankasri.com/astrology/03/123923?ref=lankasritop

No comments:

Post a Comment