தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 செப்டம்பர், 2014

வெள்ளை குழந்தையை பெற்றெடுத்த கருப்பின தாய்: பிரித்தானியாவில் அதிசயம் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் கருப்பின தாய் ஒருவருக்கு வெள்ளையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் பக்கிங்ஹெம்சையர் (Buckinghamshire) நகரை சேர்ந்த கேத்திரின்-ரிச்சர்ட் (Catherine-Richard) என்ற தம்பதியினருக்கு வெள்ளை நிறத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஜோனா (Jonah) என்ற பெயரிட்டுள்ள இந்த குழந்தை தனது தாய் கேத்தரின் போல் கருப்பாக பிறக்காமல் வெள்ளையாக பிறந்துள்ளது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை வெள்ளை தோலுடன் இருந்தாலும் குழந்தை, தாயின் தோல் கொண்டு தான் பிறக்கும் என்பது வழக்கமான ஒரு விடயமாகும்.
ஆனால் ஜோனா போல தந்தையின் நிறம் கொண்டு பிறந்த குழந்தை மில்லியனில் ஒன்றாக தான் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து கேத்தரின் கூறுகையில், நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த எனது குடும்பத்தில் வெள்ளை தோலுடன் எவரும் இல்லை என்றும் எனது குழந்தை இவ்வாறு வெள்ளையாக பிறந்தது எனக்கு வியப்பூட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது குழந்தை ஜோனா ஆரோக்கியத்துடன் வலுவாக உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக