சுவிட்சர்லாந்தில் பிரபலமாகி வரும் வேகன் டயட் என்றழைக்கப்படும் காய்கறிகள் மட்டுமே உண்ணும் முறையால் குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸில் கடந்த சில ஆண்டுகளாக இறைச்சியை தவிர்த்து காய்கறிகள் மட்டுமே உண்னும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதாக தெரியவந்துள்ளது.
மேலும் பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இறைச்சியை உண்ண கொடுக்காமல் காய்கறிகள் மட்டும் சாப்பிடுவது தான் ஆரோக்கியம் என நினைத்து செயல்படுகின்றனர்.
ஆனால் இவ்வாறு இறைச்சி சாப்பிடாமல் இருப்பதால் உடலில் விட்டமின் பி சக்தி குறைந்து மூலை மற்றும் நிரம்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என மத்திய பொது சுகாதார அலுவலகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
மேலும் வேகன் டயட் சிறு குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல என்றும், அவ்வாறு காய்கறி உணவுகள் மட்டுமே உண்டு வளர்ந்தால் அது அவர்களை குறைபாடுடன் வளர்ப்பதோடு அவர்களுக்கு கடும் தீங்கையும் விளைவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக