SpaceX திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு CRS-4 Dragon ஓடம் நேற்று முன்தினம் ஏவப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை விண்ணில் பாய்ந்துள்ளது CRS-4 Dragon ஓடம்.
ஏறத்தாழ 2,268 கிலோகிராம் எடைகொண்ட இந்த விண்வெளி ஓடம் புளோரிடாவிலுள்ள Cape Canaveral விண்வெளி ஏவுதளத்திலிருந்து கிழக்கு பிராந்திய நேரப்படி அதிகாலை காலை 1.52 மணியளவில் ஏவப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதிய வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக