நம்மில் பலர் இத்தாலிக்கு பயணித்து இருக்கலாம்.சிலர் இத்தாலிக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருக்கலாம்.
பொதுவாக இத்தாலி நாட்டிற்கு செல்லும் உல்லாச பயணிகள் கூறும் சில பிரபலமான சுற்றுலா தளங்கள் பைசா நகர சாய்கோபுரம், வெனீஸ் நகரம், அபென்நைன் மலைக்காட்சி, மிசாபல் மிலன் மலைத்தொடர், வாடிகன் அருங்காட்சிகம் உள்ளிட்டவை ஆகும்.
ஆனால் இத்தாலியினுள் சான் மரினோ (San Marino ) என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது என்பது நம்மல் பலருக்கு அறியாத ஒரு இடம் என்றே கூறலாம்.
எனவே சான் மரினோ நாட்டின் வரலாற்றையும், சிறப்பையும் பற்றி இப்போது நாம் காணலாம்.
சான் மரினோ
சான் மரினோ (San Marino) என்பது இத்தாலிய (Italy) நாட்டினால் சூழப்பட்டு உள்ள சிறிய நாடு. ஆல்பின் மழைப் பகுதியின் கிழக்குப் பகுதியில் இந்த நாடு அமைந்து உள்ளது.
இதன் பரப்பளவு 61.2 சதுர கிலோ மீட்டர். ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளான வாட்டிகன் (Vatican City) மற்றும் மொனாகோ (Monaco) நாடுகளை விட சிறிய நாடு என கூறப்படுகிறது.
உலகின் பழமையான நாடு
உலகின் மிகப் பழமையான குடியரசான இந்த நாடு AD 301 முதல் மரினஸ் (Marinus) எனும் பெயரில் இருந்துள்ளது.
வரலாற்று கதையின்படி இந்த நாட்டை அர்பியை சேர்ந்த மரினுஸ் (Marinus of Arbe) எனும் கல் உடைக்கும் நபர் AD 301 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று நிறுவினார்.
சில சுவாரஸ்ய தகவல்கள்
· இதன் அரசியல் அமைப்பு சாசனம் 1600 ஆம் வருடத்தை சேர்ந்தது.
· இதன் நாணயம் யுரோ, மற்றும் இத்தாலியின் பல பழக்க வழக்கங்களைக் கொண்டு உள்ளது.
· உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ள பொதுவான நேரத்தை விட இந்த நாட்டின் நேரம் ஒரு மணி நேரம் அதிகம் (UTC+1) . வெயில் காலத்தில் அது இரண்டு மணி நேரம் அதிகமாக உள்ளது.
· 2011 ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 31,700
· நாட்டின் தொலைபேசி எண் கோட் IDD +378. மின் விசையின் அளவு 230V/50Hz.
நல்ல பொருளாதாரம்
இந்த நாட்டின் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமானது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP $1.44 பில்லியன்.
நாட்டின் வடிவத்தில் நாணயம்
இந்த நாடு ஐரோப்பிய யூனியனின் ஒரு அங்கத்தினர் நாடாக இல்லை என்றாலும் இதன் நாணயம் யூரோ ஆகும்.
மேலும் இந்த நாடு தன்னுடைய நாட்டு பாணியில் யூரோவின் நாணயத்தை வடிவமைத்துக் கொள்ள உரிமை பெற்று உள்ளது.
ஆகவே யூரோ நாணயம் சேர்க்கும் பழக்கமுடைய மக்கள் இந்நாட்டின் நாணயங்களை மிகவும் விரும்புகின்றனர்.
உல்லாச பயணிகளை ஈர்க்கும் தபால் தலைகள்
யூரோ நாணயங்களைப் போலவே இந்த நாட்டின் தபால் தலைகளை இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வாங்கிச் செல்வதினால் இந்த நாட்டிற்கு வருமானம் ஈட்டும் ஒன்றாக உள்ளது.
குற்றங்களே இல்லை!
இங்கு இதுவரை சிறைச்சாலை ஏதும் இல்லை என்றும் ஒரே ஒரு கைதி மட்டும் தான் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நாட்டிற்கு செல்ல ஆசையா
சான் மரினோவிற்கு செல்ல விமான சேவைகளோ இல்லை ரயில்களோ இல்லை. வாகனங்களில் சாலை வழியேதான் அங்கு செல்ல முடியும்.
சோதனை சாலைகளும் கிடையாது என்பதினால் இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாகனங்களைக் கட்டணம் இன்றி நிறுத்த முடிகின்றது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 29 செப்டம்பர், 2014
இத்தாலியுள் புதைந்த குட்டி நாடு (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக