தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 செப்டம்பர், 2014

இது நிஜமல்ல கதை!! பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்!!



அவளோ  விவாகரத்தானவள் .காரணம் நாட்டில் இருந்து கட்டி கூட்டிவந்தவன் பழைய காதலியுடன் உறவாடுகிறானாம்,அதன் பின் அகதி முகாமில் இருந்தவனுடன் இவள்  காதலாம்! இருவருக்கும் என்ன வித்தியாசமோ!!

இது நிஜமல்ல கதை!!பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி மட்டுமா பொய்யா மொழி கூட!

அவனோ இருதாரம்,மூன்று பிள்ளைகளுக்கு தந்தை!மூத்த மகள் காதலித்தவனுடன் சென்று சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் வயதினள்!அப்பாவுக்கோ அவள் வயதில் சில பல காதலிகள்!!அவளுடனும் ...!!!தாத்தா கூட கோபால கிறிஸ்ண ர்! அப்பாவும் அம்மாவுமாக மகனுக்கு பேத்தி வயதை ஒத்த பெண்ணை காரில் கடத்த உதவியதாக போலீசில் பதிவுண்டு!!

அவள் வேலை செய்வதோ அகதி முகாமிற்கு அருகில்,அவர்களோ முகாமில்!அவளுக்கு கார் உண்டு,வீடு உண்டு!அப்பா அம்மா மட்டுமல்ல பாட்டிகளும் உண்டு,சகோதரர் உறவுகள் உண்டு!இருந்தும் இவர்களிடத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு!

இந்தப்பாட்டியோ மகள் என்று உறவாடுவார்!

இவர் மகனோ இரு மனைவிகளையும் கைவிட்டு(முதல் மனைவி உறவுக்காரி,காதலித்து ஓடியவர்கள்,இன்னொரு காதல் இவருடன் இருந்த நண்பருடன் உருவாகி ஓட்டம், அடுத்தவள் ஊர் சென்று பிடித்து கட்டியவள்,பெற்றோருடன் மோதுவதால் முதலில் பெற்றோர் வெளியில்,பின்னால் பெண்  பிள்ளைகளுடன் மனநோயாளியாக்கப்பட்டு வெளியில்)புதுமாப்பிள்ளையாகி  திருமணத்துக்கு பெண் தேடுபவர்!இலங்கையில் கூட தேடியுள்ளார்!இடையில் சிறு சிறு காதல் பழகும் நண்பர்கள் பிள்ளைகளுடன்!

இப்போது தொலைபேசியில் அவருடன் பேசினால் வைக்க மனமில்லாத அளவுக்கு இவள் உருக்கத்தில்,அம்மாவின் மகள் அமமாவின் உண்மை  மகனுடன் தொலைபேசி வைக்கமுடியாத அளவு உரையாடலில்!

பழகும் நபர்களின் குடும்பம்,குலம்,குணம் அறியாமல் பழகும் இவர்கள் படித்த பட்டதாரிகள்!!இது சரியா?

இப்போது அவளுக்கு திருமணம் பேசுவது இவர்கள்,இதில் இவர்கள் மகனுடன் தொலைபேசித் தொடர்பு!!பெற்றோர் இருக்க உறவுகள் இருக்க  இந்த கோபாலனை இரு இரவுகள் துணைக்கு ,பாதுகாப்புக்கு வீட்டில் படுக்கவைத்த அப்பெண் பற்றி கட்டப்போறவன் எப்படி நினைப்பான்!

இவரே முன்பு கட்டியவன் இன்னொரு பெண்ணுடன் கதைப்பதால் விவாகரத்து கொடுத்தவராச்சே,

சிந்திக்க வேண்டாமோ!

இதுதான் இன்று வெளிநாடுகளிலும் நம் தமிழர் கதை!


ஜாதியை மறைப்பதாக எண்ணி கேவலமான குணமுடையவரை திருமணம் இன்று செய்வதன் காரணம் விவாகரத்து பெற்றால் புது மலராகலாம் என்ற நம்பிக்கையே!இல்லை ஒன்றுடனே இறுதிவரை என்றால் குணம்,குலம்,பெண்,ஆண் சகவாசம்,குற்றநிலை எல்லாம் அறிந்த பின்தான் பிள்ளைகளை பெற்றோர் மற்றவருடன் பழகவே விடுவர்!தெரிந்தும் அனுமதிப்பது பிள்ளையில் பாசம் இன்மையா?ஆளை மாற்றலாம் முன்னனுபவம் பெறட்டும் என்ற நோக்கமா?ஆண்கள் அன்று தொட்டு முன்னனுபவம் பெற பெண்களுக்கு அந்நிலை கிடைக்காத நிலை இருந்து வந்தது!கிடைத்தாலும் வெளியில் சொல்லி பெருமை கொள்ள முடிவதில்லை!இன்று மாறிவிட்டதோ!பெருமை தருகின்றதோ!வருபவனும் அதைத்தான் எதிர்பார்க்கின்றானோ(மேல்நாட்டில் அப்படித்தானே!) விசா இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற நினைப்பே பலரை தீமை செய்ய வைக்கிறது என்பதை நிரூபிப்பவர்கள் மேற்குலகில் உள்ள நம்மவர்களுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக