அண்ணாதுறை தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்ததைப் போலவே, ஆங்கில மொழியிலும் புலமை பெற்றிருந்தார். |
ஆங்கில மொழியில் கூட அடுக்குமொழி பேசி, ஆங்கிலேயர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு பெருமையை நிலைநாட்டியவர் அண்ணாதுரை. ஒருமுறை வெளிநாடு சென்றிருந்தபோது, ரயில் வண்டியில் பயணம் செய்தார், இவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஆங்கிலேயர் ஒருவருக்கு, இவரை கண்டதும் ஒரே ஆத்திரம். தங்களுக்கு சமமாக ஒரு தமிழன் பயணம் செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை, அத்துடன் இவருக்கு எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். தாங்கள் மிகவும் உயர்ந்த பிறவிகள் என்ற நினைப்பு அவர்களுக்கு, அந்த ஆங்கிலேயரின் கால் அடிக்கடி அண்ணாதுறையின் மீது பட்டது. அப்போதெதெல்லாம் ஸாரி என்று அண்ணாதுரையைப் பார்த்து அலட்சியமாக சொல்வார், அதில் ஒரு வருத்தமோ, தவறு செய்துவிட்டோமோ என்ற உணர்வோ இருக்காது, திமிராக கடமைக்கு ஸாரி சொல்லிக்கொண்டிருந்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அண்ணா, அவரது மொழியிலேயே சூடு கொடுக்க நினைத்தார். அடுத்த முறை அந்த ஆங்கிலேயரின் கால் தன் மீது பட்டதும், மீண்டும் ஸாரி சொன்னார் ஆங்கிலேயர். அதற்கு அண்ணாதுரை ஐ ம் நாட் ஸாரி டு கேரி யுவார் ஸாரி என்றார். அந்த பதிலைக் கேட்ட ஆங்கிலேயர் அதிர்ச்சியடைந்தார், தங்களுடைய மொழியில் இத்தனை அழகாக பதில் சொல்வார் என்று நினைக்காததால் மிகவும் வெட்கமடைந்தார், அத்துடன் தள்ளி உட்கார்ந்து கொண்டார் அந்த ஆங்கிலேயர். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 26 செப்டம்பர், 2014
ஸாரி....மூக்கில் விரல் வைத்த ஆங்கிலேயர்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக