தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

சரும அழகை பாதுகாக்கும் “உருளைக்கிழங்கு”



அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கிய பயன்படுத்துவார்கள்.
இதனால் சிலருக்கு சருமப் பிரச்னைகள் அதிகரிக்குமே தவிர, முற்றிலுமாக போகாது.
எனவே இயற்கை வழிகளை பின்பற்றினாலே, அழகை அதிகரிக்க முடியும்.
* உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி சருமம் பொலிவோடு இருக்கும்.
* சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் 2 ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி 25 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.
* எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து அதனை சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசி பின் குளிர்ந்த நீரில் கழுவி இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் படிப்படியாக மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக