பொதுவாக சிவன் கோவில்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சிறப்பை பெற்று திகழ்வதாகவே இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் குறுப்புடி என்னும் ஊரில் சோமேஸ்வரர் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தை, சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இந்த சிவலிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அதாவது அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த சிவலிங்கம், பின்னர் சிறிது, சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது.
SEVALENGIM