எகிப்தில் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் உடலை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தின் புராதன நகரமான அமரானாவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்வில், அந்தப் பெண்ணின் உடல் கிடைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் உடல், "மம்மி'யாகப் பாதுகாக்கப்படவில்லை எனவும், ஒரு சாதாரண தரைவிரிப்பில் சுற்றப்பட்டிருந்த நிலையில் அது கண்டெடுக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஜொலந்தா பாஸ் கருத்து வெளியிடுகையில்,
"அந்தப் பெண்ணின் தலைமுடி மிகவும் சிக்கலான முறையில், சுமார் 70 ஜடைகளாகப் பின்னப்பட்டுள்ளது. பெண்ணின் வயது மற்றும் பிற விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
இப்பகுதியிலிருந்து, சிகையலங்காரம் அழியாத நிலையில் மேலும் சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கில தொல்லியல் ஆய்வு இதழான "ஜர்னல் ஆஃப் எகிப்தியன் ஆர்க்கியாலஜி'யில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக