2. எனது ஊர்க்காரன் ’தனது ஊரைப்போலவே அடுத்த ஊர்க்காரனும் தனது ஊரைப் பெரிதாய் மதிக்கிறான்’ என்பதை ரசிக்கும்போது.
3.எனது மொழிக்காரன் பிற மொழிகளும் அந்தந்த மக்களின் தாய் மொழிதான் என்பதைத் தெரிந்து கொண்டு, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கும் பிற மொழி அறிவைத்தேடிக் கொள்வதுதான் தனது மொழிக்குத் தான் செலுத்தும் உயர் மரியாதை என்ற அறிவைக் கொள்ளும்போது.
4.எனது மதத்தைச் சேர்ந்தவன் பிற மதத்தின் உயர் நெறிகளை வாழ்வில் கடைப்பிடிப்பதில் நெகிழும்போது.
5.எனது நாட்டைச் சேர்ந்தவன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தான் பிறந்த நாட்டைத் தாய் வாழும் தேசம் என்றே கருதிக் கொண்டு உழைக்கும்போது.
6.ஒரு படைப்பாளி பிற படைப்பாளிகளின் சிறந்த கருத்துக்களைத் தனது சிந்தனையினின்றும் உயர்வானவை என்று கட்டுப்பாடின்றிப் புகழுரை செய்யும்போது.
7.பெண்கள் இயற்கையாகவே பெண்களுக்குரிய பண்புகளை மீறாமல் தங்கள் அறிவையும் திறமையையும் எழுத்தில் காட்டும்போது.
இவை ஏழும் என்னை எப்போதும் ஈர்த்துக் கொண்டிப்பவைதாம்.
Krishnan Balaa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக