தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 செப்டம்பர், 2014

இந்த நீதித்துறை இந்த நாட்டுக்கு ஏற்புடையதா?


இந்த நீதித்துறை இந்த நாட்டுக்கு ஏற்புடையதா?வெள்ளையன் கொடுத்துவிட்டுப்போனத்தை தலையில் கட்டியாடுகிறீர்களே,இந்த சட்டத்தில் எவ்வளவு குறைபாடுகள் உள்ளதே!!அவற்றை கண்டு கொள்ளாமல்  இருந்துகொண்டு நீதியின் உயர்வு,நீதிமன்றுகளின் தெய்வீகம் பற்றி சொல்கிறீர்களே !

அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கையில் சாடும் திறன்  மற்றோருக்கு இல்லையோ!!

நாட்டுக்கே  பொருந்தாத சாட்சிகளை கொண்டு மட்டும் தீர்வு சொல்லும்,வக்கீல்களின் திறமையால் உண்மைகளை பொய்யாக்க இடமிருக்கும் இந்த மன்றுகள் மக்களை மதிக்கும் மக்களுக்காக சட்டமிருக்கும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு பொருத்தமே!

பொய்யாகவே வாழும் இந்தியாவுக்கு எப்படி பொருந்தும்??

வாய்தா போட்டு ஏமாற்றலாம்,ஏழைகளுக்கு நீதி கிடைக்காமல் போக வழியமைக்கும் இம்மன்றங்கள் பணக்காரருக்கானதே!

எனவே இவற்றை புனிதமாக்கி கொச்சைப்படுத்தாதீர்கள்!

பணமும் சட்சியுமே இங்கு முடிவை தீர்மானிக்கும்,இப்போது அரசியல் நிலையம் சேர்ந்துவிட்டது!

குற்றம் சாட்டப்பட்டவரை,அவர் குடும்பம்,கௌரவம்,ஊர் தெரிந்தவரே வழக்கை விசாரிப்பதில் கிடைக்கும் நேர்மை இந்த மன்றங்களால்,அங்கு பதவிக்கும் பணத்துக்கும் வேலை செய்யும் நீதிபதிகளால் நிச்சயம் தரமுடியாது!இம்மன்றுகள் சத்தியாக்கிரகத்துக்கே பயந்த நேர்மையாளருக்கே  பொருந்தும்!சத்தியாக்கிரகிகளை தாக்கும்,சாகவிடும் இந்தியாவுக்கெல்லாம் பொருந்தாது!!

கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்க!


இந்தப் பித்துக்குளிகளை எண்ணி...
-------------------------------------------------------
வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய சட்டப்படி உரிமை இருக்கும்போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதியைத் தரம் கெட்ட வகையில் இங்கே சிலர் விமர்சனங்களை எழுதி வருகிறார்கள்.
நீதித் துறையின் மாண்பை அறியாத மூடத்தனத்தின் வெளிப்பாடுதான் இதுவன்றியே தவிர விசுவாசத்தின் வெளிப்பாடாகாது.
பப்ளிசிட்டியோடு, பணம் சம்பாதிக்கும் குறியில் நீதியின் தீர்ப்பைக் கற்றறிந்த வழக்கறிஞராக இருந்தும்கூட அதை பொது இடத்தில் கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் சார்பில் மேல் முறையீட்டில் பெரும் ஊதியம் பெற்று வாதாடும் வாய்ப்பையும் பெற்றுள்ள ராம்ஜெத் மலானியின் நோக்கத்தில் காரணம் இருப்பதை ஏற்கலாம்.
ஆனால், இந்த அரைகுறை அரசியல் வேக்காட்டுகள்,
நீதியைச் சபித்து வெறுமனே முழங்குவதாலும் முனகுவதாலும் விளையப்போவது ஒன்றுமில்லை.
பண்பாட்டின் சின்னத்தைத் தகர்த்தெறிந்து கற்றறியா அஞ்ஞான விளக்கினைப் பிடித்துக் கொண்டு பித்துக்குளித்தனமாக எழுதுவோரின் பதிவுகள் எனது ‘நியூஸ் ஃபீடில்’ வரும்போது ‘இவர்கள் எனது நட்புப் பட்டியலில் இருக்கின்ற அவலத்தை மனக்கசப்போடு உணர்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக