தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, September 21, 2014

தூக்கம் உங்கள் கண்களை தழுவவில்லையா?

குறட்டை, தூக்கமின்மை, தூக்கத்தில் உளறுதல், தூக்கத்தில் நடப்பது போன்றவை தூக்கம் தொடர்பான சில பிரச்சனைகளாகும்.
ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
தூக்கத்தால் பாதிக்கப்படும் நீங்கள் இதோ அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள்,
* போதுமான தூக்கத்தை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டியது முதலாவது நடவடிக்கையாகும். சரியான நேரத்திற்கு படுக்க சென்று சரியான நேரத்திற்கு எழுந்து கொள்வதை பழக்கப்படுத்தின் கொள்ள வேண்டும்.
*விடுமுறை நாட்களானாலும் கூட விடியற்காலையில் ஒரே நேரத்தில் விழித்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
*பகலில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்க்க வேண்டும்.
*தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மன அழுத்தம் தரும் வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
*காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
*தூங்கச் செல்லும் முன்பாக ஆழ்ந்த சுவாசப்பயிற்சி, யோகாசனம் மற்றம் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
*வெளிச்சம் குறைந்த, அமைதியான, குளிச்சியான படுக்கை அறையில் நல்ல தூக்கம் வரும்.
*தேவைப்பட்டால் காது மற்றும் கண்களை அதற்கான உபகரணங்கள் கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.
*காபி, டீ, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பு மதுபானம் அருந்துவதோ புகைப்பிடிப்பதோ கூடாது.
*சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவரது வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும், நல்லா தூங்கினால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment