கொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.
* பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
* ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.
* வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது.
இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.
* பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு.
இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு, இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.
* ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது.
இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.
* க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.
ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
* கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக