உலகில் பெரும்பாலான நபர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாகவே இருக்கிறோம்.
இடது கை பழக்கம் உடையவர்களை பார்த்தால் நிச்சயம் வியப்பாகத்தான் இருக்கும், உலக மக்களில் நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
வலது, இடது கை பழக்கங்கள் அனைத்தும் நம் மூளையை கட்டுப்படுத்தும் பகுதியை பொருத்தே அமைகின்றன.
மாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்க்ளின், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகை மர்லின் மன்றோ, அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் - இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.
பொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும், மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கட்டுப்படுத்துகின்றன.
மூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு?
மூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும். மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான் நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன. 1648ம் ஆண்டு சர் தாமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார். இடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப் பிரித்தார். இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும், பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார். மெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்! |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 29 செப்டம்பர், 2014
இடது கை பழக்கம் உள்ளவரா? என்ன காரணம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக