தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, September 20, 2014

உடலில் நச்சுக்களை வெளியேற்றும் சூப்பர் உணவுகள் !



வயதானாலும் ஆரோக்கியமாக வாழ உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
வெளியிடங்களில் நாம் உள்ளிழுக்கும் புகை, ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் மற்றும் கிருமிகளின் மூலம் உடலில் வேண்டாத நோய்கள் வந்து குடியேறி விடலாம்.
எனவே ஆரோக்கியமான உணவு முறைகளின் மூலம் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது அவசியம்.
அவகோடா
அவகோடாவில் நார்ச்சத்துக்களும், ஆக்சிஜன் எதிர்பொருட்களும் அதிகம் உள்ளன, கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருளான பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது.
இது செரிமானத்திற்கு உதவுவதுடன், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
பீட்ரூட்
புற்றுநோய்க்கு எதிராக போராடும் பீட்ரூட் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை எளிதாக வெளியேற்றிவிடும்.
ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், சர்க்கரை நோயையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது.
முட்டைக்கோஸ்
பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமான ஒன்று முட்டைக்கோஸ், இதனை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் நச்சுப் பொருட்களை அறவே விரட்டி விடலாம்.
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், அழற்சியை எதிர்க்கும் குணங்கள் அடங்கியுள்ளது.
பூண்டு
இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய உணவு பூண்டு.
நுரையீரலை சுத்திகரிக்கவும் உதவுவதுடன், கந்தகத்தின் குணங்கள் நச்சுப் பொருட்களை மிகவும் சக்தியுடன் எதிர்த்து வெளியேற்றுகின்றன.
இஞ்சி
நோய் எதிர்ப்பு உணவுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது இஞ்சி, இதில் உள்ள காரத்தன்மை உடலில் உள்ள நச்சுக்களை விரட்டும் தன்மை உடையது.
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கொடியில் மிகவும் திறன் வாய்ந்த நச்சு நீக்கும் குணங்கள் உள்ளன.
புற்றுநோய் வருவதையும் தடுக்கும் அஸ்பாரகஸ், மூப்படைவதையும் தவிர்க்கும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது.
ப்ராக்கோலி
உடலையும், மனதையும் சுத்தப்படுத்தும் சக்தி கொண்ட உணவுகளில் ஒன்று ப்ராக்கோலி.
இதில் உள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் மற்றும் சில வைட்டமின்கள் நிரம்பியுள்ள ப்ராக்கோலி இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.

No comments:

Post a Comment