தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஃபளூடா


ஐஸ்கிரீம் வகைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று ஃபளூடா.
இன்று அதனை செய்துபார்த்து ருசியுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - அரைலிட்டர்
* சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி
* துளசிவிதை - இரண்டு தேக்கரண்டி
* குல்ஃபி ஐஸ்க்ரீம் - நான்கு குழிக்கரண்டி
* வெந்த அரிசி நூடுல்ஸ் - நான்கு மேசைக்கரண்டி
* ரோஸ் எசன்ஸ் - கால் தேக்கரண்டி
* தண்ணீர் – அரைக்கோப்பை
செய்முறை:
* முதலில் துளசி விதையை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும்.
* பாலையும் தண்ணீரையும் கலந்து காய்ச்சி சர்க்கரையை கலந்து ஆறவைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும்.
* வேகவைத்த அரிசி நூடுல்ஸை குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடித்து வைக்கவும்.
* பிறகு அரவை இயந்திரத்தில் ஐஸ்க்ரீமை போட்டு சிறிது பாலை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து எல்லாப் பாலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி ஒரு பெரிய கோப்பையில் ஊற்றி ரோஸ் எசன்ஸை கலந்து வைக்கவும்.
* பிறகு நான்கு பெரிய பீங்கான் குவளையில் ஊறிய துளசி விதை சிறிதைப் போட்டு பிறகு சிறிது நூடுல்ஸை போட்டு தயாரித்த பால் கலவையை அதன் மேல் ஊற்றி நீண்ட கரண்டியால் இலேசாக கலந்து ஜில்லென்று பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக