தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஒவ்வொரு நிமிடமும் திக் திக் திக்! ஹிட்லரிடம் சிக்கிய பெண்ணின் கதறல்!

ஜேர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் உணவு பரிசோதகராக பணி புரிந்த பெண் தனது அனுபவங்களை ஊடகம் ஒன்றிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.
இரண்டாம் உலக போர் நேரத்தில் ஹிட்லருக்கு உணவு பரிசோதகராக பணிபுரிந்த மர்கோ ஓக் (Margo Wolk, 96) ஒவ்வொரு நிமிடமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் செய்த வேலையை எவ்வாறு செய்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.
ஹிட்லரின் உணவில் விஷம் கலந்துள்ளதா என்பதை அறிவதற்கு பரிசோதகராக பணி புரிந்த 15 பெண்களில் இவர் மட்டும் தான் தற்போது உயிருடன் இருக்கிறார்.
பிரித்தானியா, ஹிட்லரின் உணவில் விஷம் கலக்க போவதாக பரப்பி விட்ட வதந்திகளால் அவர் இறைச்சி சாப்பிடாமல், அரிசி, நூடில்ஸ், பட்டாணிகள் மற்றும் காலிபிளவர் ஆகிய உணவுகளை மட்டும் தான் உட்கொண்டுள்ளார்.
இந்த உணவிலும் விஷம் கலந்துள்ளதாக என்பதை அறிய உணவு பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மர்கோ தான் ஒவ்வொரு முறை உணவை தின்று பரிசோதனை செய்து விட்டு உயிர் பிழைத்தால் ஆனந்தத்தில் கதறி அழுததாக தெரிவித்துள்ளார்.
பரிசோதகராக நியமிக்கப்பட்ட அனைவரும் அழுதுக் கொண்டே உணவு சாப்பிட்டதாகவும், பின்னர் உயிர் பிழைத்திருந்தால் ஆனந்த கண்ணீர் விடுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இவர் இந்த பணியில் வற்புறுத்தப்பட்டு தள்ளப்பட்டுள்ளார். தினமும் அவர் பாதுகாவலர்களால் அழைத்து செல்லப்பட்டு உணவு பரிசோதிக்க நியமிக்கப்படுவார்.
இருப்பினும் இவர் ஹிட்லரை கண்டதில்லை என்றும், தான் பாதுகாவலர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பெர்லின் ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின் தங்களது வாழ்க்கை மிகவும் மோசமானதாக மாறியதாகவும், தங்களை 14 நாட்கள் அவர்களது இடத்தில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் இவரை பிரித்தானிய அதிகாரி ஒருவர் காப்பாற்றி தனது கணவருடன் சேர்த்து வைத்ததாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக