தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

வியர்வையை விரட்ட ஆபரேஷன், ஊசிகள்! ஷாக் ரிப்போர்ட்!

நம் உடலில் தோன்றும் வியர்வையை முற்றிலுமாக விரட்ட தற்போது ஒரு புதிய மருத்துவ வசதி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மனித உடலின் வெப்பத்தை குறைப்பதற்காகவும், சமநிலை செய்யவுமே நம் உடலில் இருந்து வியர்வை வெளிப்படுகிறது.
ஆனால் வியர்வையும் அதன்மூலம் ஏற்படும் நாற்றத்தையும் விரும்பாத சிலர் தங்கள் உடலில் வியர்வையை விரட்ட பல உத்திகளை பயன்படுத்துகின்றனர்.
அதாவது எந்நேரமும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பது, டியோடரண்ட் பயன்படுத்துவது போன்ற சில செயல்கள் மூலம் தம் உடலில் சுரக்கும் வியர்வையை தற்காலிகமாக தடுத்து நிறுத்துகின்றனர்.
மேலும், மனித உடலில் அனைவருக்கும் அக்குளில் வியர்வை சுரப்பிகள் அதிகம் இருப்பதால் அங்கு வியர்வை சுரப்பதும் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் வியர்வையை அறவே விரட்ட தற்போது இரண்டு வகையான மருத்துவ சிகிச்சை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொடாக்ஸ் ஊசி
அதில் ஒன்று, ‘பொடாக்ஸ்’ என்ற விலை மதிப்புள்ள ஊசியை அக்குளுக்கு கீழே போட்டுக் கொள்வது.
அதாவது அக்குளுக்கு சற்று கீழே இருக்கும் வியர்வை நாளங்களை கண்டுபிடித்து, 12 முதல் 15 இடங்களில் இந்த பொடாக்ஸ் மருந்தை கொஞ்சம், கொஞ்சமாக ஊசி மூலம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு அந்த மருந்தினை செலுத்திய சிறிது நேரத்துக்குள்ளேயே நமது உடலில் நல்ல வித்தியாசம் தெரியும்.
மேலும், இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் 95 சதவீத மக்களுக்கு 48 மணி நேரத்திற்குள் வியர்வை கிட்டத்தட்ட முழுவதுமாக நின்று விடுகிறது.
பின்னர் ஒரு வார காலத்தில் உடலில் வியர்வையும், நாற்றமும் ஏற்படுவது முற்றிலுமாக நின்றுவிடும்.
இந்த ஊசியை ஒரு முறை போட்டுக் கொண்டால் ஒரு வருடத்திற்கு பயன் தரும் என்றும் மேலும் தேவையெனில் மீண்டும் ஊசி போட்டுக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவர்கள் பலர் இந்த மருந்தினால் உடலில் ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த எச்சரிக்கை எதையும் காதில் வாங்காமல் இந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக தெரியவந்துள்ளது.
வியர்வை நாளங்களை செயலிழத்தல்
இது ஒருவகை சிகிச்சையெனில் மற்றொரு சிகிச்சைமுறை ஒன்று உள்ளது.
அந்த சிகிச்சையில் உடலில் உள்ள வியர்வை நாளங்களை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் அதை செயல் இழக்கச் செய்து விடுகின்றனர்.
25 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் நம் உடலில் வியர்வை வரவே வராது.
மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், நம் உடலின் வெப்பத்தை குறைப்பதற்காக இயற்கையால் உருவாக்கப்பட்டது தான் வியர்வை.
அதனை இவ்வாறு செயலிழக்க செய்வதால் நம் உடலில் ஏற்படும் சாதாரண எரிச்சல், வெப்பம் போன்ற உணர்வுகளை தாங்கிக் கொள்வது மிகக் கடினமாகிவிடும்.
இது போக வீக்கம், தலைவலி, கழுத்து வலி போன்ற பக்க விளைவுகளால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், இயற்கை தேவையில்லாமல் உடலில் எதையும் உருவாக்கவில்லை என்றும் வியர்வை உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக