தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 செப்டம்பர், 2014

ஆரோக்கியம் தரும் பப்பாளி அடை!

தோல் முதல் விதை வரை மருத்துவ பலன்களை கொண்டுள்ளது பப்பாளி.
பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், கண் பார்வையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும் பப்பாளி பழம் நல்லது.
இப் பப்பாளியை கொண்டு செய்யப்படும் அடையினை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோள மாவு - 200 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
பப்பாளி காய் சிறியது - 1
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், பப்பாளி காயை துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு, சோள மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய பப்பாளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
இந்த மாவை ஊற்றி அடை போன்று சமைத்து சாப்பிட்டால் சுவையான சோள பப்பாளி அடை ரெடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக