கனடாவில் உள்ள இரண்டு சகோதரர்கள் உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை செய்துள்ளனர். இவர்களுடைய சாதனையை கின்னஸ் சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு சான்றிதழை அளித்துள்ளது.
கனடாவில் உள்ள Turnip Town, என்ற பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் 70 மைக்ரோ மீட்டர் அகலமும் 100 மைக்ரோமீட்டர் நீளமும் கொண்ட உலகின் மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த புத்தகத்தை உருவாக்க இந்த சகோதரர்களுக்கு $15,000 செலவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
30 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை சாதாரண கண்களால் படிக்க முடியாது. மைக்ரோஸ்கோப் உதவியுடன் மட்டுமே படிக்க முடியும். மனிதனின் தலைமுடியை விட இந்த புத்தகத்தின் அகலம் குறைவு என்பது அதிசயத்தக்கது ஆகும்.
இந்த புத்தகம் தற்போது Simon Fraser University, in British Columbia, என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை காண பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர் Malcolm Douglas Chaplin என்றும் இந்த புத்தகத்தை crystalline silicon என்ற பொருளின் உதவியால் புத்தக வடிவமாக்கியவர் இவருடைய சகோதரர் Robert என்றும் கூறப்படுகிறது.small booksmall boook1