கடலில் இருந்து கிட்டத்தட்ட 8500 அடி உயரத்தில் உலகின் முடிவு என்று கூறப்படும் இடத்தில் ஊஞ்சல் ஆட உங்களுக்கு ஆசையா?
தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரிலேயே அந்த ஊஞ்சல் அமைந்துள்ளது.
ஈகுவடாரில் உள்ள Casa Del Arbol என்ற இடத்தில் 8500 அடி உயரத்தில் அமைந்துள்ள பழைய மர வீடு ஒன்றில் சாதாரண கயிறுகள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ஊஞ்சல் ஒன்று உள்ளது.
அந்த சாதாரண ஊஞ்சலில் கீழே விழாமல் பாதுகாக்க பாதுகாப்பு பெல்ட் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பூகம்பத்தை கண்காணிக்கும் நிலையமாக செயல்பட்டு வரும் அந்த மர வீட்டில் இருந்து மிக அருகிலேயே துங்குரஹா (Tungurahua) என்ற எரிமலையும் அமைந்துள்ளது.
மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் எரிமலை வெடிக்கும் சமயத்தில் கூட, இந்த ஊஞ்சலில் ஆடுவதற்காக தைரியமாக வருகின்றனர்.
மேலும், இவ்வளவு ஆபத்துகள் உடைய இந்த ஊஞ்சலில் ஆடுவதற்கென்றே மலையேற்றம் செய்யும் சாகசக்காரர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக