இந்தோனேஷியாவில் உள்ள மக்கள் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விநோத விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
இந்தோனேஷியாவின் செலும்பிங் (Selumbung) கிராமத்தில் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் குசாபா பூசே (Ngusaba Puseh) என்ற விநோத விழா நடைபெற்றுள்ளது.
இதில் ஆண்கள் விநோதமாக ஆடை அணிந்து அணிவகுத்து நடந்து சென்றனர்.
ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் நெருப்புகளை மூட்டி பாரம்பரிய நடனமான கத்திகளை வைத்து ஆடும் கெரிஸ் நடனம் ஆடினர். இந்த விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது சில ஆண்கள் மிகவும் ஆழ்ந்த நிலைக்கு சென்றதால் கத்திகளை தங்களது உடம்பில் குத்தி கொண்டுள்ளனர்.
இறந்த முன்னோர்களுக்கு பூசாரி படையல் வைத்து வழிபாடு நடத்தினார்.
இந்த கிராமத்தில் மொத்தம் 3000 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக