தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, September 28, 2014

நீங்க மடிக்கணனி பயன்படுத்துகின்றீர்களா? இந்த விடயத்தில் உஷார்!

நமக்கு பலவகையில் பயன்படும் மடிக்கணனியை பாதுகாக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
நாம் அதனை எப்படி பராமரித்து வந்தாலும் அதனை எந்த சூழ்நிலையில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது. சந்தைகளில் புதிதாக வரும் இவற்றை வாங்கினால் மட்டும் போதுமா? அதனை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அச்சுறுத்தும் வைரஸ்
அனைத்து விதமான கணனிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்த வைரஸ்கள் தான். இதனால் மடிக்கணனியில் ஆன்டிவைரஸ் இருப்பது என்பது முக்கியமாக உள்ளது.
வெப்பம்
உங்க மடிக்கணனி சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள். லாப்டாப்பை எப்போதும் நேரடி சூரிய வெப்பத்தில் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வெப்பம் மடிக்கணனியை பாதிக்கும் ஒன்று.
சேதப்படுத்துதல்
பலரும் அவசரத்தில் பெண்டிரைவை நெட்வர்க் கனெக்டர்களிலும், எங்கு எல்லாம் யுஎஸ்பி போல் காணப்படுகிறதோ அங்கு எல்லாம் நுழைக்க முயற்சிப்போம். இதனால் மடிக்கணனி யுஎஸ்பி,ஓடியோ மற்றும் நெட்வர்க் கனெக்டர்களை சேதமாகாமல் பயன்படுத்த வேண்டும்
தூசு ஆபத்து
உங்க மடிக்கணனி எந்த சூழலிலும் தூசு படியாமல் பார்த்து கொள்ளுங்கள். இதற்கு லாப்டாப் பயன்படுத்தாத சமயத்தில் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்.
முறையான பொருட்களால் சுத்தம்
கணனியை சுத்தம் செய்ய நினைக்கும் எண்ணம் சரியான ஒன்று. ஆனால் சிலர் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு மடிக்கணனியையும் சுத்தம் செய்வர். இது தவறு, எப்போதும் கணினி சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும்.
தம் அடிக்காதீங்க
மடிக்கணனி அருகில் புகை பிடித்தால் உங்க உடலை போலவே லாப்டாப்பையும் அது பாதிக்கும். மேலும் எப்போதும் மடிக்கணனியை சமயலைறையில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
ஹார்டு டிரைவ் பாதுகாப்பு
எல்லா மடிக்கணனிகளிலும் ஷாக் ப்ரூப் இருக்கும். அப்படி இருந்தும் ஹார்டு டிரைவ் பாதுகாப்பு உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.
பைல் பேக்கப்
ஒரு வேளை இந்த முயற்சிகளையும் தாண்டி உங்க மடிக்கணனி பழுதடைந்தால். முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான பைல்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment