தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கர்ப்பிணிகளுக்கு என்னென்ன வைட்டமின்கள் தேவை?

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் மிகவும் இன்றியமையாதது.
அதிலும் கர்ப்பிணிகள் 5 வகையான வைட்டமின்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் குழந்தைகளில் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ (A), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி(C), கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் டி (D).
குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஈ (E) மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குறைபிரசவம் போன்றவற்றை தவிர்க்க வைட்டமின் கே (K) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
1. வாரத்திற்கு ஒரு முறை முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், கருவிற்கு நல்ல அளவில் வைட்டமின் ஏ கிடைக்கும்.
2. கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக கேரட்டை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தோ வருவது நல்லது. ஆட்டு ஈரலை நன்கு வேக வைத்து, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
3. கர்ப்பிணிகள் அவ்வப்போது ஸ்ட்ராபெர்ரியை மில்க்ஷேக் போன்றோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தாலோ, அதில் உள்ள வைட்டமின் சி சத்தை நன்கு பெறலாம்.
4. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பது அனைவருக்கு நன்கு அறிந்த விடயமே.
5. கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கொய்யாப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.
5. தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. சிலருக்கு குடைமிளகாய் மிகவும் பிடிக்கும். அவ்வாறு குடைமிளகாய் சாப்பிடுவதாக இருந்தால், சிவப்பு நிற குடைமிளகாயை வாங்கி சாப்பிடுங்கள்.
6. மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் இதனைஅளவாக சாப்பிட வேண்டும். கானாங்கெழுத்தி மீன், உடலுக்கு மிகவும் நல்லது.
7. எனவே கர்ப்பிணிகள் அந்த மீனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது, வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும்.
8. உடலில் வைட்டமின் ஈ சத்தை அதிகரித்து, குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சாதாரண எண்ணெய்க்கு பதிலாக இனிமேல் ஆலிவ் ஆயிலுக்கு மாறுங்கள். ஏனெனில் ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ சத்து வளமான அளவில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக