தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கடலிலும் தங்க வேட்டை


இயற்கையின் வளங்கள் எந்த மூளையில் இருந்தாலும், அதனை கண்டுபிடித்து எப்படியாவது சுரண்டிவிடுவான்.
காடுகள், மலைகள், சமவெளிகள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களில் இயற்கை வளங்களான தாதுக்கள், கனிமங்களை என எதனையும் விட்டு வைக்காத மனிதர் தங்கம், வைரம், தாமிரம், இரும்பு, நிலக்கரி, பெட்ரோலியம் என பூமியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பட்டியலின் நீளம் அதிகம்.
பூமியில் வேட்டையை முடித்துக்கொண்ட பின்னர், தற்போது கடலிலும் தங்கள் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தாமிரம், தங்கத்தை எடுப்பதற்கான பணிகளில் இறங்கிவிட்டது பப்பூவா நியூ கினியா.
பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் கடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் தன் பணிகளை செவ்வனே அது தொடங்கியுள்ளது.
சமீபத்தில் கனடா நாட்டு Nautilus Minerals என்ற தனியார் நிறுவனம், பப்பூவா நியூ கினியா ஆழ்கடல் பகுதியில் கனிமங்களை தோண்டும் பணியை தொடங்கியுள்ளது.
கடலுக்கு அடியில் இருக்கும் தங்கம், தாமிரம் மற்றும் இதர கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.
கடலில் வாழும் பல உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் சுமார் 1500 மீட்டர்(1.5 கிலோமீட்டர்) ஆழத்தில் இந்த பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஆழ்கடலில் இருக்கும் பவளப் பாறைகள், குன்றுகள், மணல் பகுதியில் ராட்சத இயந்திரங்களையும் இறக்கியுள்ளது. இதற்காக பல விலையுயர்ந்த கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.
1990 ம் ஆண்டிலிருந்து கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான முயற்சி நடந்து வந்தது. ஆனால் விதிமுறைகள், அது இதுன்னு பல தடைகளுக்கு பின்னரே தற்போது தொடங்கியுள்ளது.
சர்வதேச கடல்படுகை ஆணையமும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது.
வருங்காலங்களில் கடல்மட்ட பகுதியில் கனிமங்கள் எடுப்பதற்கான விதிமுறைகளையும், வழிமுறைகளையும் உருவாக்கி வருகிறது ஆணையம்.
ஆழ்கடல் பகுதியில் கனிமங்கள் எடுப்பது இதுவே முதல் முறையென்றாலும், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டால் தான் விளைவுகள் என்னவென்று அறிய முடியும் என்று கனிமங்களை வெட்டியெடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
பூமியில் எந்த பகுதியையும் விட்டுவைக்காத மனிதன், அடுத்து கனிமங்களுக்காக பயணிக்கும் இடம் செவ்வாய் கிரகமோ, சந்திர கிரகமாகவோ இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக