உலகளவில் மனதை மயக்கும் அழகிய குகைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
குங்கூர் பனி குகை(Kungur Ice Cave, Russia)
ரஷ்யாவில் உள்ள இந்த குகைக்குள் நாம் நுழைந்த அடுத்த கனமே வேறொரு உலகத்திற்குள் நுழைந்ததை போன்ற பிரமிப்பு ஏற்படும்.
ரஷ்யாவில் உள்ள உரல்ஸ் மலை பகுதியில் இயற்கையாய் அமைந்துள்ள இந்த குகை காண்போரை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.
வட்னஜோகுல் பனிப்பாறை குகை(Vatnajokull Glacier Cave, Iceland)
ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை குகையான இது தொடர்ந்து பனி உருகி கொண்டே இருப்பதால் தோற்றத்தில் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும்.
பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அழகோடு இந்த குகை இருந்தாலும், பனிப்பாறைகள் உருகி அளவு மாறி கொண்டே இருப்பதாலும், அவ்வப்போது பனி பாறைகள் உடைவதாலும் நேரில் சென்று பார்ப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை.
சூன் டூங் குகை(Son Doong Cave, Vietnam)
வியட்னாமில் அமைந்துள்ள சூன் டூங் என்ற இந்த குகை தான் தற்போது உலகத்தில் உள்ள மிகப்பெரிய குகை என்று கருதப்படுகிறது.
1991ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகையின் வயது 2 முதல் 5 மில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
க்ளோவார்ம்ஸ் குகை(Glowworms Cave, New Zealand)
நியூசிலாந்தில் அமைந்துள்ள இந்த க்ளோவார்ம்ஸ் குகையை இரவு நேரத்தில் பார்த்தால் நட்சத்திரங்களால் நிறைந்த வானம் போல் காட்சியளிக்கும்.
இருள் மிகுந்த அந்த குகையின் சுவர்களின் மேல் க்ளோவார்ம்ஸ் எனப்படும் ஒரு வகை புழுக்கள் அமர்ந்துள்ளது.
அந்த புழுக்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒளியினால் ஏற்படும் அந்த வண்ணம், சுற்றுலாவாசிகளை 120ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது.
கோரைப்புல் குகை(Reed Flute Cave, China)
சீனாவில் அமைந்துள்ள இந்த கோரைப்புல் குகையின் வாசலில் வளரும் கோரைபுல் புல்லாங்குழல் செய்யப் பயன்படுகிறது.
1200 ஆண்டுகளாக மக்களை கவர்ந்து வரும் இந்த குகையின் உள்ளே இருக்கும் கண்ணாடி போல் தோற்றமளிக்கும் தண்ணீர், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பல பாறை அமைப்புகள் என பல இயற்கை அம்சங்கள் அமைந்துள்ளன.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 26 செப்டம்பர், 2014
மனதை மயக்கும் அழகிய குகைகளை பார்த்ததுண்டா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக