பழங்களிலேயே வாழைப்பழம் ஏராளமான நன்மைகளை மனிதனுக்கு அள்ளிதருகிறது.
இதோ அதன் மருத்துவ பயன்கள் சில,
* வாழைப்பழம் உங்கள் மன உளைச்சலை நீக்கும்.
* சிறுநீரக புற்று நோயிலிருந்து உங்களை காக்கும்.
* காலை வயிற்றுப் பிரட்டலை நீக்கும். உங்களை சுறுசுறுப்பானவராக்கும்.
* இதில் உள்ள டிரிப்டோபன், செரடோனினாக மாறி உங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும்.
* உடற்பயிற்சிக்கு முன்னால் 2 வாழைப்பழம் சாப்பிட்டு பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாமல் இருக்கச் செய்யும்.
* பொட்டாசியம் ரத்தக் கொதிப்பை சீராக வைக்கும். இது பக்கவாதத்தை குறைக்கும்.
* பொட்டாசியம் சத்து மிகுந்தது. உப்பு சத்து குறைந்தது.
* நரம்பு மண்டலத்தினை பலப்படுத்துவது.
* ரத்த சோகை நீக்கும், இரும்பு சத்து கொண்டது. கால்சியம் சத்தினால் எலும்புகளை பலப்படுத்த வல்லது.
* வெள்ளை அணு உற்பத்திக்கு பெரிதும் உதவுவது.
* வைட்டமின்-பி அதிக அளவில் கொண்டது. இது 46 சதவீத அளவினை கூட்ட வல்லது.
* குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி நல்ல சத்தினை குடல் உறிஞ்ச பேருதவி தருவது.
* மலச்சிக்கலை எளிதில் நீக்குவது, சீரான சக்திக்கு உகந்தது.
* இரவில் அதிகம் குடித்தவருக்கு காலையில் வரும் தலைவலி வாழைப்பழம் உண்ண வெகுவாய் குறையும்.
* கண் பார்வைக்கு மிக முக்கியமானது. குறிப்பாக கண் பார்வை அழிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை நோயினை தவிர்க்கும்.
* புகை பிடித்தலை நிறுத்தி அதனால் ஒரு படபடப்பு, மன உளைச்சல், சோர்வு என தவிக்கின்றீர்களா? கவலை வேண்டாம். வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி சத்தும், பொட்டாசியம், மக்னீசியமும் உங்களை நன்கு பார்த்துக் கொள்ளும்.
* வாழைப்பழ தோலின் உட்பகுதி கொண்டு பல்லை பாலிஷ் செய்ய பல் பளிச்சென ஆகும்.
* க்ளுகோஸ், சுக்ரோஸ் ப்ரக்ட்டோஸ் சர்க்கரை நிறைந்தது. வைட்டமின்கள் பி, சி, ஏ, பொட்டாசியம், நார்சத்து, மக்னீசியம் என இதன் சத்துக்கள் ஏராளம்.
* காலை டிப்னோடு வாழைப் பழம் உண்டால் இருதயம் பலப்படும்.
* சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் மருத்துவர் ஆலோசனையோடு பாதி பழம் எடுத்துக் கொள்ளலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக