ஆட்டுக்கால் பாயா மிகவும் சுவையாக இருப்பதுடன், உடலுக்கும் நல்லது.
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால்: அரை கிலோ
பெரிய வெங்காயம்: 3
தக்காளி: 2
பச்சை மிளகாய்: 2
இஞ்சி பூண்டு விழுது: தேவையான அளவு
மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள்– தேவையான அளவு
தேங்காய்ப் பால்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
செய்முறை
ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும்.
ஆட்டுக்காலுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை தேவையான அளவு சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் நான்கு குவளை(டம்ளர்) தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும்.
வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். இறக்கும் முன் சிறிது மிளகுத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி!!!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக