தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தந்தை மகளுக்கு எழுதிய புகழ் பெற்ற கடிதம் !


புகழ் பெற்ற எழுத்தாளர் எஃப். ஸ்காட் ஃபிட்ஸ் ஜெரால்டு தன் பதினொரு வயது மகள் ஸ்காட்டிக்கு எழுதிய கடிதம்.
அன்புள்ள ஸ்காட்டி,
நீ உன் கடமைகளை ஒழுங்காகச் செய்வதைப் பற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீ பிரஞ்சு மொழி படிப்பதைப் பற்றி அடுத்த கடிதத்தில் இன்னும் விளக்கமாகக் கூற முடியுமா?
நீ மகிழ்ச்சியாக இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், நான் எப்போதும் மகிழ்ச்சியை நம்பியதில்லை.
அதே சமயம், நான் துன்பத்தையும் நம்பியதில்லை. இவற்றை எல்லாம் உன்னால் மேடையிலோ, திரையிலோ, அல்லது புத்தகங்களின் பக்கங்களிலோதான் பார்க்க முடியும். இவை உண்மையாக உன் வாழ்க்கையில் எப்போதும் நடைபெறாது.
வாழ்க்கையில் உன் நற்பண்புகளுக்காகக் கிடைக்கும் வெகுமதிகளையும் (உன் திறமைகளுக்கு தகுந்தபடி), கடமை தவறியதற்காக உனக்கு கிடைக்கும் இரண்டு மடங்கு தண்டனைகளையும்தான் நான் எப்போதும் நம்புகிறேன்.
உன் கேம்ப்பில் பெரிய நூலகம் இருந்தால், திருமதி டைசனிடம், ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் இந்த வரி குறித்துக் கேள்! - "அழுகிய மலர்கள்களைச்செடிகளை விட மோசமான நாற்றம் எடுக்கும்"
நான் எப்போதும் உன்னைப் பற்றி இனிமையாகவே உணர்கிறேன். நான் கேம்ப் கட்டணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்.
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
கவலைப்பட வேண்டியவை
துணிச்சலைப் பற்றிக் கவலைப்படு
தூய்மையைப் பற்றிக் கவலைப்படு
திறமையைப் பற்றிக் கவலைப்டு
சாமர்த்தியத்தைப் பற்றிக் கவலைப்படு
கவலைப்படக் கூடாதவை
பொதுவான கருத்துக்கள் பற்றிக் கவலைப்படக் கூடாது
பொம்மைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
வளர்வதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
உன்னை யாராவது முந்திச் செல்வதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
வெற்றியைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
தோல்வியைப் பற்றிக் கவலைப்படக் கூடாது, அது உன்னுடைய தவறாக இல்லாவிட்டால்
பெற்றோர்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
ஏமாற்றங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
இன்பங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
திருப்திகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது
சிந்திக்க வேண்டிய விஷயங்கள்
என் உண்மையான நோக்கம் என்ன?
தோழர்களுடன் ஒப்பிடும்போது நான் எந்த வகையில் சிறப்பானவள்?
நான் உண்மையாகவே மனிதர்களைப் புரிந்துகொள்கின்றேனா? அவர்களுடன் ஒழுங்காகப் பழகுகிறேனா?
என் உடலை நான் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறேனா? அல்லது அதைப் புறக்கணிக்கிறேனா?
மிகுந்த அன்புடன்
அப்பா
ஆகஸ்ட் 8, 1933

1 கருத்து: