தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 செப்டம்பர், 2014

இளமையான வாழ்க்கைக்கு பழைய சோறு சாப்பிடுங்க!

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக