தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 செப்டம்பர், 2014

தோல் பிரச்னைகளும், பாதுகாப்பு முறைகளும்!

மனித உடலின் தோல் பகுதியை ஆரோக்யத்தின் கண்ணாடி என்றே சொல்லலாம்.
தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம்.
தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது.
* தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.
* சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம்.
* தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம்.
* அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தெரிவு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை
* புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
* வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம்.
* எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது.
* தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக