தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 மே, 2015

வெடித்துச் சிதறியது Google Nexus 6 மின்கலம்! அதிர்ச்சியில் பயனர்கள்!

உள்ளங்கையில் அடங்கும் ஸ்மார்ட் கைப்பேசியில் தரப்பட்டுள்ள வசதிகள் காரணமாக மக்கள் மத்தியில் அவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டி நிலைமை காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் புதிய பல அம்சங்களை உள்ளடக்கியதாக கைப்பேசிகளை வடிமைத்து வருகின்றன.
எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்படும் அம்சங்களுக்கு ஏற்ப அவற்றின் மின்கலங்கள் செயற்படுவதற்கு போதிய சக்தியைக் கொண்டிருப்பதில்லை.
இதனால் கடந்த காலங்களில் சம்சுங்கின் Galaxy S4 மற்றும் iPhone 5 என்பவற்றின் மின்கலங்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
இவற்றினைத் தொடர்ந்து தற்போது Google Nexus 6 ஸ்மார்ட் கைப்பேசியின் மின்கலமும் வெடித்துச் சிதறியுள்ளது.
இதனால் பயனர்கள் குறித்த கைப்பேசி வகை தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக