படுக்கை அறையில் விளக்குகள் எரிவது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தூங்கி போவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது உடல் எடையை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுிய ஆய்வின் படி நல்ல இருட்டான அறையில் தூங்காமல், செயற்கை ஒளி இருக்கும் அறையில் தூங்குவது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தூங்கி போவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றால் உடலின் இயல்பான செயல்பாடு மற்றும் கலோரிகளை எரிக்கும் பழுப்பு கொழுப்பு செல்களின் செயல்பாடுகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் சராசரியாக வாரத்தில் 20 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாகவும், இதுவே 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 27 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக