தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 மே, 2015

சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் பேஸ்புக்

சமூகவலைத்தளங்களின் வரிசையில் தொடர்ச்சியாக முன்நிலையில் காணப்படும் பேஸ்புக்கினால் பல ஆபத்துக்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
இதற்கு மகுடம் வைத்தால் போல் புதிய ஆய்வு ஒன்றில் பேஸ்புக் பயன்படுத்துவதனால் தனி நபர்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு ஐக்கிய இராச்சியத்தின் Brunel பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த உளவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின்போது 555 பேஸ்புக் பயனர்களிடம் சில கேள்விகள் வழங்கப்பட்டு விடையளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக அதிகளவான பேஸ்புக் பாவனையாளர்கள் தற்பெருமைக்காக பேஸ்புக் Post, Status என்பவற்றினை இடுவதாகவும், இதற்காக தமது குழந்தைகள் தொடர்பான விடயங்களை அப்டேட் செய்தல், அனைத்து வகையான விடயங்களையும் வெளிப்படையாக பகிர்தல், போன்ற செயற்பாடுகளால் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக