அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசுபவர்கள் பணிகளை அதிகத்திறனுடன் மேற்கொள்வார்கள் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின்
கொலம்பியா தொழிற்கல்லூரி ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஸ்லேபியர்(Michael
slepiyar) மேற்கொண்ட ஆய்வில், வீண் வம்பு விடயங்கள், பிறரது ரகசியங்களை
மனதுக்கு பூட்டி வைப்பதால் மனச்சுமை ஏற்படும்.
அவ்வாறு மனதுக்குள் எதையும் வைத்திருப்பவர்கள் பிறருடன் கலகலப்பாகப்
பேசமாட்டார்கள், இதனால் சுறுசுறுப்பிலும், நட்புறவுகளிலும் அவர்கள்
பின்தங்கியே இருப்பார்கள்.
அலுவலகங்களில் பணியாற்றும்போது, இந்த மனச்சுமை பணியாற்றும் உற்சாகத்தைக்
குறைக்கிறது. இதன் விளைவாக அவர்களது வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது.
ஆனால், மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் கிசுகிசுக்களை பேசி
விடுபவர்கள், அலுவலகப்பணியில் அதிக கவனம் செலுத்தி செயல்பட முடியும் என்று
இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்டான்ஃபேர்டு பல்கலைக்கழகத்தின் நிக்கோலஸ் கேம்ப்(Nicholas Camp)
மற்றும் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஈ.ஜே. மஸிகாம்போ(E.J.
Masikampo) ஆகியோரும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆனால், அலுவலக வேலைகளை தவிர்த்துவிட்டு ஊர்வம்பு பேசுவதையே குறிக்கோளாக
கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆய்வு பொருந்துமா என்பது தெரியவில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக