உடலில் வெண்மை படலம் படருவது ஆபத்தான ஒன்றாகும்.இப்படி வெண்மை படலம் படருவதற்கு “லூகோடெர்மா” அல்லது “விடிலிகோ” என்று பெயர்.
பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது ஏற்படுகிறது.
வெண் படலம் முதலில் கைகள் மற்றும் கால்களில் துவங்குகிறது, சிலருக்கு
மூக்கு, வாய், கண்கள், தொப்புள் போன்ற இடங்களில் வெண் படலம் தோன்றும்.
பிறகு பரவாமல் அந்தந்த பகுதிகளுடன் நின்று விடும், சிலருக்கு உடல் முழுவதும் பரவும்.
உடலுக்கு மெலனின்(Melanin) என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான
முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும்
பரம்பரையாக ஏற்படுவது தான்.
எனவே தோல் பரிசோதனை செய்தால் மட்டுமே, எந்த வகையான நோய்
ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். வெண் படலம் தோன்றினால், நம் உடலில்
சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மற்ற இடங்களில் தோல் கருப்பாகி, வெண் படலம் வித்தியாசமாக தெரிய துவங்கி விடும்.
சன் பில்டர் 30 சதவீதம் அடங்கிய சன்ஸ்கிரீன் லோஷனை, உடலில் வெயில்படும் இடங்களில் பூசிக் கொண்ட பிறகே, வெளியில் செல்ல வேண்டும்.
சிறிய வெண் படலங்களை, சில களிம்புகளைப் பூசி மறைக்கலாம்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்டிராய்டு(Steroid) களிம்புகளும்
பூசலாம். எனினும் தொடர்ந்து களிம்பு பூசினால் தோலின் தன்மை கெட்டு விடும்.
வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் நிறம் தரக் கூடிய எந்த அணு இல்லையோ அதை
வேறு ஒரு பகுதியில் இருந்து எடுத்து வைத்து வளர்ப்பது மெலனைட்
கல்ச்சர்(Melanite Culture).
வெண் புள்ளிகள் உடலில் தோன்ற ஆரம்பித்தவுடனேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் விரைவில் குணப்படுத்தலாம்.
இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது, காலை ஏழு மணி வெயிலில் சிறிது
நேரம் நிற்பது போன்றவற்றின் மூலம் வெண் புள்ளிகள் புதிதாக ஏற்படுவதைத்
தடுக்க முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக