மனித மூளையில் வளரும் அணுக்களின் வளர்ச்சி அசாதாரணமாக இருக்கும் நிலையே மூளை கட்டி எனப்படுகின்றது.
இது இரண்டு வகைப்படும். அவை வீரியம் இல்லாதவை(Benign tumour) மற்றும் வீரியம் மிக்கவை(Malignant tumour or cancer) ஆகும்.
மேலும் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அவை பரவும் வேகத்தை கொண்டு மூளை கட்டியை நான்கு நிலையாக பிரிக்கலாம்.
வீரியமில்லாத கட்டி: இந்த வகை கட்டிகள் பொதுவாக ஆபத்து குறைந்தவை. மேலும் இந்த கட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரவுதல் வேகம் குறைவாக இருக்கும்.
இந்த கட்டிகள் மேலும் பலவாறு வகைப்படுத்தப்படும் அவை:
Gliomas: மூளையில் உள்ள க்ளையல் திசுவில் ஏற்படும் கட்டி இது. இதனால் மூளையில் உள்ள நரம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்துகொள்ளும்.
Meningiomas- மூளையின் வெளிபுறத்தில் ஏற்படும் கட்டிகள்
Acoustic neuromas- மூளையின் அடிப்புறத்தில் ஏற்படும் கட்டிகள். இது பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குதான் ஏற்படும்.
Craniopharyngiomas :காது சம்பந்தப்பட்ட ஒலிநரம்புகளில் ஏற்படும்.
Haemangioblastomas: மூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும்.
Pituitary adenomas: மூளையின் பிட்யூடரி சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகள்.
இந்த வகை கட்டிகளுக்கு எளிதாக சிகிச்சைகள் மேற்கொண்டு குணப்படுத்தலாம். எனினும் வாழ்நாள் முழுவதும் இதனை கண்காணித்துகொண்டே இருக்கவேண்டும்.
வீரியமுள்ள கட்டிகள் அல்லது புற்றுநோய் ; இந்த வகை கட்டிகள் மிகவும் ஆபத்தானவை.
இது மூளையில் தொடங்குவது அல்லது மற்ற பாகங்களில் தொடங்கி மூளையில் பரவுவது என இரண்டு வகையுண்டு.
பொதுவாக உடலின் மற்ற பாகங்களில் தொடங்கி மூளையில் பரவுவதே இந்த வகையில் அதிகமாக காணப்படுகின்றது. பொதுவாக மூளை கட்டி என்பது அனைத்து வயதினரையும் தாக்கும் ஒரு நோயாகும்.
அறிகுறிகள்
கடுமையான தலைவலி
உடல் வலிப்பு
தொடர் வாந்தி குமட்டல் மற்றும் சோர்வு ஏற்படுதல்
நியாபக மறதி மற்றும் மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள்
பக்க வியாதி அல்லது உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலி ஏற்படுதல்
மேற்காணும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நலம்.
சிகிச்சைகள்
சிகிச்சைகள் மூலம் மூளை கட்டிகளை அகற்றிவிடலாம். எனவே இந்த நோயை குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அவசியம்.
மற்ற நோய்களை போல் தான் மூளை கட்டியும் என்று எண்ண வேண்டும். மூளை கட்டிகளை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றுவதே உலகளவில் நடைமுறையில் உள்ள முக்கிய சிகிச்சையாகும்.
அறுவை சிகிச்சை மூலமாக மூளைகட்டிகளை முழுவதுமாக நீக்கிவிட முடியாது என்பதால் கதிரியக்க சிகிச்சை(Radiology) மற்றும் கீமோதெரபி(chemotherapy) சிகிச்சை ஆகியவைகள் மூலமும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
பொதுவாக வீரியமில்லாத கட்டிகளை இந்த வகை சிகிச்சைகள் மூலமாக எளிதாக சரி செய்துவிடலாம். ஆனால் வீரியமிக்க கட்டிகளுக்கு என்ன தான் சிகிச்சைகள் மேற்கொண்டாலும் அவை திரும்ப வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே வாழ்நாள் முழுவதும் மூளை கட்டிகளை கண்காணிப்பது மற்றும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம்.
எனவே மூளைகட்டிகள் இருந்தாலும் தகுந்த உடற்பயிற்சி , சிகிச்சைகள் மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக