தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 மே, 2015

உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ரோபோக்கள்! (வீடியோ இணைப்பு)

தற்போது உள்ள இயந்திர காலக்கட்டத்தில் எந்திர அறிவியல் என்பது முக்கிமான நிலையை எட்டியிருக்கிறது.
 எந்திர அறிவியல் (Robotics) என்பது mechanical engineering, electrical engineering மற்றும் computer science ஆகிய பொறியியல் பகுதியால் ரோபோக்களுக்கு வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதனுடைய வேலைகளில் தற்போது ரோபோக்களின் பங்கு அதிகமாக இருப்பதால் இது தொடர்பான ஆராய்ச்சிகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இவை அனைத்தும் மனிதனின் செயல்பாடுகளை கொண்டதாகவே தயாரிக்கப்படுகிறது.
பேரழிவின் போது மனிதர்களை மீட்பது, தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை முறியடிப்பது, வெடிகுண்டுகளை செயலிழக்க வைப்பது, உளவு பார்ப்பது போன்ற சேவைகள் முதல் மனிதர்களுக்கு உதவியாக வீட்டு வேலை செய்வது வரை அனைத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.
எப்படி வந்தது?
“ரோபட்” என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் செக் குடியரசின் Karel Čapek என்ற பிரபல எழுத்தாளர். இவர் தனது R.U.R. (Rossum's Universal Robots) என்ற பதிப்பில் அந்த வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இது 1920ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதை வைத்து தான் முதன்முதலாக செயற்கையாக ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கினர். இதனை ரோபட் என்றும் அழைத்தனர். இதன் பிறகு Isaac Asimov என்பவர் "Liar" என்ற கதை புத்தகத்தை தொழிநுட்பங்களை புகுத்தி எழுதியிருந்தார்.
இந்தப் புத்தகம் 1941ம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. 1942ம் ஆண்டு ரோபட்கள் மூன்று விதியைப் பின்பற்றி இயங்குகின்றன என்ற கூற்றை Isaac Asimov கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து 1939- 40 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் Elektro என்று பெயர் சூட்டப்பட்ட முதல் ரோபட் உருவாக்கப்பட்டது. இதன் பிறகே ரோபட் பற்றிய பல ஆராய்சிகளும், இதற்காக தொழிநுட்ப கூடங்களும், இது தொடர்பான படிப்புகளும் தொடங்கப்பட்டன.
எப்படி வேலை செய்கிறது?
Robotics வளர்ச்சி காரணமாக பல்வேறு வகைப்பட்ட ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. TALON military robots, industrial robots, robot snakes, Capuchin Climbing Robot, sailboat robot, humanoid robot, educational robot என தற்போது கலக்கிக் கொண்டுள்ளது.
Power source:
Power source என்பது robot இயக்கத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. compressed gases, Solar power, hydraulics, flywheel energy storage இவை மூலம் ரோபட் தனக்கு தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது.
Actuation:
Actuation என்பது ரோபோட்டுகளுக்கு தசைப் போன்ற அமைப்பாகும். இது தனக்கு கொடுக்கப்பட்ட மின்சக்தியை இயக்கமாக மாற்றப் பயன்படுகிறது.
Electric motors:
Electric motors ரோபோக்களின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு சிறிய பகுதிகளையும் அசைவிற்குள்ளாக்க இது பயன்படுகிறது. கையடக்க ரோபோக்களில் DC Electric motors-களும், பெரிய அளவிளான ரோபோக்களில் AC Electric motors-களும் பயன்படுத்தப்படுகிறது.
Linear actuators:
Linear actuators ரோபோக்களின் செயல்பாட்டில் உதவுகிறது. இது industrial robots போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. compressed air கொண்டு hydraulic actuator மூலம் இது இயங்க ஆரம்பிக்கிறது.
Series elastic actuators:
Series elastic actuators நடப்பது போன்ற ரோபோக்களின் இயக்கத்தில் அதிக பங்கு வகிக்கிறது. இவை humanoid robots- களில் ஒரு உந்துதல் சக்தியை அளிக்கிறது.
Air muscles:
Air muscles என்பது சில டியூப்கள் மூலம் காற்று செலுத்தப்பட்டு ரோபோக்களுக்கு உந்துதல் சக்தியை கொடுப்பதாகும். Pneumatic artificial muscles சில ரோபோக்களில் பயன்படுத்தப்படுகிறது.
Muscle wire:
சிக்கலான பாகங்களில் இணைக்கப்பட்டுள்ள பல இயங்கு பாகங்களுக்கு இந்த Muscle wire மூலம் தேவையான சக்தி வழங்கப்படுகிறது. இவை எப்படி பாதிப்பிற்குள்ளானாலும் மீண்டும் தனது பழைய நிலைக்கு வந்துவிடும்.
Electroactive polymers:
humanoid robots- களில் அதன் முகத்தில் காட்டப்படும் ஒவ்வொரு அசைவும் இந்த Electroactive polymers மூலம் செய்யப்படுகிறது.
Sensing:
Sensors தான் ரோபோக்களின் துல்லியமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. அதாவது கொடுக்கப்படும் தகவல்களை அப்படியே எடுத்துக் கொண்டு ரோபோக்கள் ஒரு செயலை செய்ய காரணமாக இந்த Sensors-கள் இருக்கின்றன.
இவை மட்டுமல்லாமல் எண்ணற்ற நுண்ணிய பாகங்கள் ரோபோக்களின் இயக்கத்திற்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன.
இவை எதிர்காலத்தில் மனிதனையே மிஞ்சும் அளவிற்கு வந்தால் கூட ஆச்சரியம் இல்லை என சில தினங்களுக்கு முன்பு விஞ்ஞானி ஸ்டீவன் ஹவ்கிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக