நொறுக்குத்தீனிகளுள் ஒன்றான சிப்ஸ் காரம், உப்பு என பலவகை சுவைகளில் இருக்கும்.
இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், குறிப்பாக இரவு நேரங்களில் தூக்கம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதனை ருசிப்பவர்கள் ஏராளம்.
ஆனால், இரவு நேரத்தில் இதனை சாப்பிடுவதால் ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு நேரத்தில் சாப்பிடுவதால், கருவிழி அசைவு குறைகிறது.
சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை.
இதில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு ‘சிப்ஸ்‘ சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது.
அதாவது 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக ‘சிப்ஸ்‘ சாப்பிடுவதால் சராசரியாக 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேருகிறது.
இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.
இதனுடன் இரவு நேரத்தில் சாப்பிடுவதால் கொழுப்புச்சத்து அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது.
ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல் பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சிந்தனைத்திறன் குறைதல், கவனம் சிதறுதல்,ஞாபக மறதி போன்றவை ஏற்படுகின்றன.
அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த இரவு தூக்கத்தை பெற வேண்டுமானால் சிப்ஸ் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக