தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 மே, 2015

உலகில் முதன் முறையாக செயற்கை விந்து உற்பத்தி: ஆண்மையிழந்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு (வீடியோ இணைப்பு)

உலகிலேயே முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி செய்து பிரான்ஸ் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள கேல்லிஸ்டெம் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இச்சாதனையை படைத்துள்ளனர்.
ஆண் இனப்பெருக்க திசு எனப்படும் ஸ்பெர்மடோகோனியாவை(spermatogonia) எடுத்து, ஆய்வுக்கூடத்தில் சிக்கலான செயல்முறையை கையாண்டு 72 நாட்களுக்கு பின் டெஸ்ட் டியூபில் இந்த விந்து(test tubes) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்  மூலம் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த விந்துவை உற்பத்தி செய்யமுடியாத லட்சக்கணக்கான ஆண்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இனி மலட்டுத்தன்மை உள்ள ஆண்களும் இம்முறையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை விந்தை கொண்டு, ஐ.வி.எப் முறையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால், செயற்கை விந்து(Artisem) குறித்த அறிவிப்பை யூன் 13ம் திகதி அன்று பிரான்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக