தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 மே, 2015

நிம்மதியான இரவு தூக்கம் வேண்டுமா? (வீடியோ இணைப்பு)

மன அழுத்தத்தை குறைத்து சுகமான இரவு தூக்கம் வேண்டும் எனறு நினைப்பவர்களுக்காக வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தை சேர்ந்த விஷுவல் கலைஞர் ஜோனி லாசன் என்பவர், அந்த நாட்டில் அழகிய பாலத்தின் கீழே சலசலவென லேசான சத்ததை எழுப்பிய படி ஓடும் நதியை, பசுமையான மரங்கள் இடையே மெல்லிய வண்ண கோடுகளாக ஊடுருவும் சூரிய ஒளியுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
கமெராவை அசைக்காமல் ஒரே இடத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்க்கும் போது, அங்கு ஓடும் நதியின் குளுமையையும், தென்றலின் அரவணைப்பையும் பார்வையாளரால் உணரமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
இந்த வீடியோவை முன்வைத்து மருத்துவ துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவமனையின் உளவியல் மருத்துவர் ஒருவர் கூறுகையில், சிகிச்சையின் ஒரு பகுதியாக இது போன்ற வீடியோக்கள் அடங்கிய டேப்லெட்களை நோயாளிகளிடம் கொடுக்கும் போது அவர்களின் மன அழுத்தம் குறைவதுடன் சுகமான இரவு தூக்கத்தையும் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக