தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 மே, 2015

உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம்.
நம் உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிளைகோஜென் என்னும் வேதிப்பொருள் உடற்பயிற்சியின் போது வெளியேறுகிறது.
அதுமட்டுமல்லாமல் நம் தசைகளும் சேதமடைந்துவிடுகின்றன, இதனால் நாம் உடற்பயிற்சியின் மூலம் இழந்த சக்தியினை, புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவற்றின் மூலம் பெறலாம்.
ஆனால், உடற்பயிற்சிக்கு பின்னர் சிலவகை உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது.
மாமிசம்
உடற்பயிற்சிக்கு பின்னர் கொழுப்புவகை உணவுகளை தவிர்ப்பது நல்லது, மாமிசத்தில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அதனை நாம் உட்கொள்ளும்போது இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பிரட்
பிரட்டில் குளூட்டென் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால் நாம் உடற்பயிற்சி மேற்கொண்ட பின்னர் பிரட்டை சாப்பிடும்போது உடலில் சர்க்கரைச்சத்து வேகமாக ஏற வாய்ப்பு உள்ளது.
நார்ச்சத்து உணவுகள்
பொதுவாக நார்ச்சத்து உள்ள உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும், ஆனால் உடற்பயிற்சி முடித்த பின்னர் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் செரிமானப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அதற்கு பதிலாக ஆம்லெட், கீரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
தயிர், வெண்ணெய்
உடற்பயிற்சிக்கு பின்னர் நம் உடலில் இரத்த ஓட்டமானது வயிற்றுக்குள் செல்லாமல் வெளியே தான் இருக்கும், எனவே அந்த நேரங்களில் தயிர் வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது செரிமானப்பிரச்சனைகள் ஏற்படும், மேலும் கொழுப்புச்சத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பழ ஜூஸ்
பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்த பின்னர் ஜூஸ் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக