தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 மே, 2015

பூமியில் ஒரு வேற்றுக்கிரக அனுபவத்தை ஏற்படுத்தும் அற்புத தீவு (வீடியோ இணைப்பு)


ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதியாகும்.
புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்க்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது.
கிரீன்லாந்து தீவு உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவாக உள்ளது. இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும்.
ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை வரிசையில் இது 214-வது இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்தில் உள்ள South Greenland, East Greenland, North Greenland ஆகிய இடங்களில் சுற்றுலாக்கான எண்ணற்ற அழகிய இடங்கள் அமைந்துள்ளன.
Banana Coast, South Greenland:
கோடை காலத்தில் சிறந்த இயற்கை அழகுடன் விளங்கும் தென் கிரீன்லாந்தில் அமைந்துள்ளது பனானா கோஸ்ட் பகுதி.
பச்சை பசேலென விளங்கும் இந்த பகுதியில் சுற்றுலாவாசிகளை கவரும் இயற்கை சூழல் அமைந்துள்ளது.
மன அமைதியை நாடும் யாவருக்கும் இந்த இடம் நிச்சயம் நல்லதொரு அனுபவத்தை தரும் என்பது உறுதி.
Hot springs of Uunartoq:
Uunartoq பகுதியில் அமைந்துள்ள இயற்கை வெந்நீர் ஊற்றுக்கள் கண்டிப்பாக மனம் கவரும் ஒன்றாக அமையும்.
புத்துணர்வை ஏற்படுத்தும் இந்த வெந்நீர் ஊற்று கடற்கரையின் அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊற்றுக்களின் வெப்ப நிலை சுமார் 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கின்றன.
இதன் அருகே அமைந்துள்ள கடற்பகுதியில், பனிக்கட்டிகள் மிதக்கின்றன. அவற்றை பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
North Greenland:
இயற்கை சூழ்ந்த வனப்பகுதிகளை கொண்டு விளங்கும் இந்த வடக்கு கிரீன்லாந்து பகுதியில் வசிப்பவர்கள் மீன் பிடித்தலையும் வேட்டையாடுதலையும் தொழிலாக கொண்டு விளங்குகின்றனர்.
சுற்றுலாவாசிகளை கவர தரமான தங்கும் விடுதிகளும், விதவிதமான அறுசுவை உணவுகளும் கிடைக்கின்றன.
East Greenland:
கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள புகழ்பெற்ற விடயங்களை பார்ப்போம்.
Flightseeing With Air Zafari
Kulusuk airport-ல் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து கீழே அமைந்துள்ள இயற்கை ரசிக்கும் அனுபவம் கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைக்கும்.
அது மட்டுமல்லாமல் படகு சவாரி, மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுக்களிலும் கிழக்கு கிரீன்லாந்து பெயர் பெற்று விளங்குகிறது.
இந்த இடங்களில் சுற்றி பார்க்கும் போது நாம் நமது உலகில் தான் இருக்கிறோமா அல்லது வேறு கிரகத்தில் சுற்றி திரிகிறோமா என்ற எண்ணம் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக