தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 22, 2015

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

`கிஸ்மிஸ் பழம்' என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம்.
இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது.
மேலும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.
உலர் திராட்சையின் பயன்கள்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.
இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

No comments:

Post a Comment